< Back
உலக செய்திகள்
லெபனானில் தொடரும் இஸ்ரேல் வான்வழித் தாக்குதல்; 33 பேர் பலி; 195 பேர் காயம்
உலக செய்திகள்

லெபனானில் தொடரும் இஸ்ரேல் வான்வழித் தாக்குதல்; 33 பேர் பலி; 195 பேர் காயம்

தினத்தந்தி
|
29 Sept 2024 12:50 PM IST

லெபனான் மீது இஸ்ரேல் மீண்டும் தாக்குதலை தீவிரப்படுத்தியுள்ளது.

ஜெருசலேம்,

இஸ்ரேலுக்கு எதிரான போரில் ஹமாஸ் அமைப்பினருக்கு லெபனானில் உள்ள ஹிஸ்புல்லா ஆதரவு அளித்து வருகிறது. இதனால், ஹிஸ்புல்லா அமைப்பினரை குறிவைத்து இஸ்ரேல் தாக்குதல் நடத்தி வருகிறது. கடந்த சில தினங்களாக ஹிஸ்புல்லா மீதான தாக்குதலை இஸ்ரேல் தீவிரப்படுத்தியுள்ளது. குறிப்பாக கடந்த சில தினங்களுக்கு முன், லெபனான் மீது இஸ்ரேல் வான்வழித் தாக்குதல் நடத்தியது. இதில், 21 குழந்தைகள், 39 பெண்கள் உள்பட 274 பேர் கொல்லப்பட்டனர். ஹிஸ்புல்லா தலைவர் ஹசன் நஸ்ரல்லாவும் கொல்லப்பட்டார்.

இந்நிலையில், தற்போது இஸ்ரேல் மீண்டும் லெபனான் மீது வான்வழித் தாக்குதல் நடத்தியிருக்கிறது. இந்த தாக்குதலில் 33 பேர் கொல்லப்பட்டனர், 195 பேர் காயமடைந்தனர். இந்த தாக்குதல் சம்பவங்கள் எப்போது நிறுத்தப்படும் என தெரியாமல் பக்கத்து நாடுகள் அனைத்தும் திணறி வருகின்றன. பெய்ரூட்டில் நடந்து வரும் தாக்குதல்கள் மிகவும் கவலை அளிக்கிறது என ஐ.நா., வருத்தம் தெரிவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்