< Back
உலக செய்திகள்
இஸ்ரேல்-ஹமாஸ் போர்; காசாவில் 44 ஆயிரத்தை தாண்டிய பலி எண்ணிக்கை
உலக செய்திகள்

இஸ்ரேல்-ஹமாஸ் போர்; காசாவில் 44 ஆயிரத்தை தாண்டிய பலி எண்ணிக்கை

தினத்தந்தி
|
21 Nov 2024 7:26 PM IST

காசா முனையில் இதுவரை 44 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்து உள்ளதாக காசா சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

காசா,

காசா முனையில் செயல்பட்டு வரும் ஹமாஸ் ஆயுதக்குழுவினர் கடந்த ஆண்டு அக்டோபர் 7-ந்தேதி இஸ்ரேலுக்குள் புகுந்து பயங்கரவாத தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் 1,139 இஸ்ரேலியர்கள் கொல்லப்பட்டனர். மேலும், இஸ்ரேலில் இருந்து 251 பேரை பணய கைதிகளாக காசாமுனைக்கு ஹமாஸ் கடத்திச் சென்றது.

இதற்கு பதிலடியாக காசாவில் உள்ள ஹமாஸ் அமைப்பினர் மீது இஸ்ரேல் அரசு போர் தொடுத்தது. சுமார் 13 மாதங்களாக நடந்து வரும் மோதலில், காசா முனையில் இதுவரை 44,056 பேர் உயிரிழந்து உள்ளதாக காசா சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. மேலும் 1,04,268 பேர் படுகாயமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த போரில் உயிரிழந்தவர்களில் பாதிக்கும் மேற்பட்டோர் பெண்கள் மற்றும் குழந்தைகள் எனவும், உயிரிழந்தவர்கள் பலரின் உடல்கள் இடிபாடுகளுக்கு அடியில் சிக்கியிருக்க கூடும் என்பதால் உயிரிழப்பு எண்ணிக்கை மேலும் அதிகமாக இருக்கலாம் எனவும் காசா சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

அதே சமயம், போரில் உயிரிழந்த ஹமாஸ் ஆயுதக்குழுவினர் மற்றும் பொதுமக்கள் ஆகியோரின் எண்ணிக்கையை தனித்தனியாக காசா சுகாதாரத்துறை அமைச்சகம் அறிவிக்கவில்லை. இதற்கிடையில், இஸ்ரேல் தரப்பில் போரில் இதுவரை ஹமாஸ் ஆயுதக்குழுவை சேர்ந்த 17 ஆயிரம் பேர் கொல்லப்பட்டுள்ளதாக தகவல் வெளியிடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்