< Back
உலக செய்திகள்
ஹிஸ்புல்லா தாக்குதல்: இஸ்ரேலில் ராணுவ அவசர நிலை பிறப்பிப்பு

Photo Credit: Reuters

உலக செய்திகள்

ஹிஸ்புல்லா தாக்குதல்: இஸ்ரேலில் ராணுவ அவசர நிலை பிறப்பிப்பு

தினத்தந்தி
|
25 Aug 2024 10:35 AM IST

வடக்கு இஸ்ரேல் மீது நேற்று நள்ளிரவு முதல் ஹிஸ்புல்லா படையினர், 70 ராக்கெட் ஏவுகணைகளை வீசி தாக்குதல் நடத்தினர்.

ஜெருசலேம்,

இஸ்ரேலுக்கும் ஹமாஸ் அமைப்பினருக்கும் இடையே சண்டை நீடித்து வருகிறது. பாலஸ்தீனத்தின் காசா நகரை நிர்வகித்து வரும் ஹமாஸ் அமைப்பினருக்கு லெபனானில் உள்ள ஹிஸ்புல்லா அமைப்பு ஆதரவு அளித்து வருகிறது. இதனால், லெபனானில் உள்ள ஹிஸ்புல்லா அமைப்பினரின் முகாம்களை குறிவைத்து அவ்வப்போது இஸ்ரேல் வான்வழி தாக்குதல் நடத்தி வருகிறது. இதற்கு பதிலடியாக ஹிஸ்புல்லா அமைப்பினரும் இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தி வருகிறார்கள்.

இந்த நிலையில், தெற்கு லெபனானின் மீது இஸ்ரேல் நடத்தி வரும் தாக்குதலுக்கு பதிலடியாகவும் ஹமாஸ் அமைப்பின் தலைவர் சயீத் கொலைக்கு பதிலடி கொடுக்கும் விதமாகவும் ஹிஸ்புல்லா அமைப்பு இஸ்ரேல் மீது தாக்குதலை தீவிரப்படுத்தியுள்ளது. இஸ்ரேலின் வடக்கு பகுதியில் நேற்று நள்ளிரவு முதல் ஹிஸ்புல்லா படையினர், 70 ராக்கெட் ஏவுகணைகளை வீசி தாக்குதல் நடத்தினர். ஹிஸ்புல்லா தாக்குதலை அடுத்து 48 மணி நேரத்திற்கு ராணுவ அவசர நிலையை இஸ்ரேல் அறிவித்துள்ளது. இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு தலைமையில் போர் ராணுவ கூட்டம் நடந்த நிலையில், அவசர நிலை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்