< Back
உலக செய்திகள்
உலக செய்திகள்
லெபனானில் இஸ்ரேல் வான்வழி தாக்குதல் - 12 பேர் உயிரிழப்பு
|9 Nov 2024 1:22 PM IST
கிழக்கு மற்றும் தெற்கு லெபனானில் இஸ்ரேல் ராணுவம் நடத்திய வான்வழி தாக்குதலில் 12 பேர் உயிரிழந்தனர்.
பெய்ரூட்,
இஸ்ரேல் - ஹமாஸ் இடையேயான போரில் ஹமாஸ் ஆயுதக்குழுவினருக்கு ஏமனில் செயல்பட்டு வரும் ஹவுதி கிளர்ச்சியாளர்களும், லெபனானில் செயல்பட்டு வரும் ஹிஸ்புல்லா அமைப்பினரும் ஆதரவு அளித்து வருகின்றனர். குறிப்பாக, லெபனானில் செயல்பட்டு வரும் ஹிஸ்புல்லா அமைப்பினர் இஸ்ரேல் மீது தொடர்ந்து ராக்கெட் தாக்குதல்களை நடத்தி வருகின்றனர்.
இதற்கு பதிலடியாக இஸ்ரேல் ராணுவம் லெபனானில் தனது தாக்குதலை தீவிரப்படுத்தியுள்ளது. இந்த நிலையில், கிழக்கு மற்றும் தெற்கு லெபனானில் உள்ள நகரங்களின் மீது இஸ்ரேல் ராணுவம் நேற்று நடத்திய வான்வழி தாக்குதலில் 12 பேர் உயிரிழந்துள்ளதாகவும், 10 பேர் படுகாயமடைந்துள்ளதாகவும் அந்நாட்டு ஊடகங்களில் செய்தி வெளியாகியுள்ளது. இந்த தாக்குதலில் சுகாதாரத்துறை அதிகாரி ஒருவரும் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.