< Back
உலக செய்திகள்
உலக செய்திகள்
லெபனானை முழு பலத்துடன் ஆதரிப்போம் - ஈரான்
|13 Oct 2024 2:40 PM IST
ஈரான் தனது முழு பலத்துடன் லெபனானை ஆதரிக்கும் என ஈரான் நாடாளுமன்ற சபாநாயகர் முகமது பாகர் கலீபாப் தெரிவித்துள்ளார்.
பெய்ரூட்,
காசாவை தொடர்ந்து லெபனான் நாட்டின் மீது இஸ்ரேல் ஏவுகணைகளை வீசி தாக்குதல் நடத்தி வருகிறது. இதன் காரணமாக பொதுமக்கள் பலர் உயிரிழந்து உள்ளனர். மேலும் பலர் படுகாயம் அடைந்து ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்நிலையில், பெய்ரூட்டில் லெபனான் சபாநாயகர் நபி பெர்ரி உடன் பத்திரிகையாளர்களைச் சந்தித்த ஈரான் நாடாளுமன்ற சபாநாயகர் முகமது பாகர் கலீபாப்,லெபனான் அரசின் மக்கள், இஸ்லாமிய பாதுகாப்புத் தொடர்பாக எடுக்கும் முடிவுகளுக்கு ஈரான் அரசு எப்போதும் முழு பலத்துடன் ஆதரிப்போம் என அவர் கூறினார்.
மேலும், போரினால் இடம்பெயர்ந்த மற்றும் பாதிக்கப்பட்ட லெபனான் மக்களுக்கு அரசாங்கத்தின் மேற்பார்வையில் உதவிகளை வழங்க ஈரான் தயாராக உள்ளதாகக் கூறிய அவர் இஸ்ரேல் தாக்குதலால் கொல்லப்பட்ட ஹிஸ்புல்லா தலைவர் ஹசன் நஸ்ரல்லாவுக்கு தனது இரங்கலைத் தெரிவித்தார்.