< Back
உலக செய்திகள்
ஈரான் மீது இஸ்ரேல் வான்வழி தாக்குதல்: ராணுவ வீரர்கள் பலி எண்ணிக்கை 4 ஆக உயர்வு
உலக செய்திகள்

ஈரான் மீது இஸ்ரேல் வான்வழி தாக்குதல்: ராணுவ வீரர்கள் பலி எண்ணிக்கை 4 ஆக உயர்வு

தினத்தந்தி
|
27 Oct 2024 1:57 AM IST

ஈரான் மீது இஸ்ரேல் நடத்திய வான்வழி தாக்குதலில் பலியான ராணுவ வீரர்கள் எண்ணிக்கை 4 ஆக அதிகரித்துள்ளது.

தெஹ்ரான்,

இஸ்ரேல் - ஹமாஸ் இடையேயான போர் ஓராண்டை கடந்து நீடித்து வருகிறது. அதேபோல், லெபானானில் செயல்பட்டு வரும் ஹிஸ்புல்லா அமைப்பும் இஸ்ரேல் மீது ஓராண்டுக்கு மேலாக தாக்குதல் நடத்தி வருகிறது. அதேவேளை, ஹமாஸ் ஆயுதக்குழு, ஹிஸ்புல்லா அமைப்புகளுக்கு ஈரான் ஆதரவு அளித்து வருகிறது.

இதனிடையே, கடந்த ஏப்ரல் 13ம் தேதி மற்றும் அக்டோபர் 2ம் தேதி இஸ்ரேல் மீது ஈரான் நேரடி தாக்குதல் நடத்தியது. ஏவுகணைகள், டிரோன்கள் மூலம் இந்த தாக்குதல்கள் நடத்தப்பட்டன.

இந்த 2 தாக்குதல்களுக்கும் பதிலடி கொடுக்கும் வகையில் ஈரான் மீது இஸ்ரேல் நேற்று திடீர் தாக்குதல் நடத்தியது. ஈரான் தலைநகர் மற்றும் பிற நகரங்களில் உள்ள ராணுவ நிலைகளை குறிவைத்து இந்த தாக்குதல் நடத்தப்பட்டது. இந்த தாக்குதலில் 2 ராணுவ வீரர்கள் உயிரிழந்ததாக ஈரான் தெரிவித்திருந்தது.

இந்நிலையில், ஈரான் மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் பலியான ராணுவ வீரர்கள் எண்ணிக்கை 4 ஆக அதிகரித்துள்ளது.

மேலும் செய்திகள்