< Back
உலக செய்திகள்
கொழும்பு நகரில்  இந்திய-இலங்கை கடலோர காவல்படைகள் உயர்மட்ட ஆலோசனை
உலக செய்திகள்

கொழும்பு நகரில் இந்திய-இலங்கை கடலோர காவல்படைகள் உயர்மட்ட ஆலோசனை

தினத்தந்தி
|
12 Nov 2024 6:51 AM IST

இந்திய-இலங்கை கடலோர காவல்படைகளின் 7-வது வருடாந்திர உயர்மட்ட ஆலோசனை கூட்டம் நடந்தது.

கொழும்பு,

கடல் பகுதியில் எதிர்கொள்ளும் சவால்களை கூட்டாக சமாளிப்பதற்காக இந்திய-இலங்கை கடலோர காவல்படைகள் இடையே கடந்த 2018-ம் ஆண்டு மே மாதம் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது. அதன் அடிப்படையில், ஆண்டுதோறும் வருடாந்திர உயர்மட்ட ஆலோசனை கூட்டம் நடந்து வருகிறது.

அதன்படி, நேற்று கொழும்பு நகரில், இந்திய-இலங்கை கடலோர காவல்படைகளின் 7-வது வருடாந்திர உயர்மட்ட ஆலோசனை கூட்டம் நடந்தது. 4 பேர் கொண்ட இந்திய குழுவுக்கு கடலோர காவல்படை தலைமை இயக்குனர் பரமேஷ் தலைமை தாங்கினார். இலங்கை குழுவுக்கு அதன் தலைவர் சேராசிங்கே தலைமை தாங்கினார்.

கடல்சார் பாதுகாப்பை வலுப்படுத்துவது பற்றியும், கடல்மார்க்கமாக போதைப்பொருள் கடத்தல் உள்ளிட்ட குற்றங்களை கூட்டாக தடுப்பது பற்றியும் விவாதிக்கப்பட்டது.

மேலும் செய்திகள்