< Back
உலக செய்திகள்
உலக செய்திகள்
குவைத்: அடுக்குமாடி குடியிருப்பில் பயங்கர தீ விபத்து - இந்தியர்கள் உள்பட 49 பேர் பலி
|12 Jun 2024 3:35 PM IST
குவைத்தில் அடுக்குமாடி குடியிருப்பில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் இந்தியர்கள் உள்பட 49 பேர் உயிரிழந்தனர்.
துபாய்,
குவைத் நாட்டில் தெற்கு பகுதியில் அகமதி மாகாணம் உள்ளது. இந்த மாகாணத்தின் மங்கப் பகுதியில் 6 மாடிகளை கொண்ட அடுக்குமாடி குடியிருப்பு உள்ளது. இதில் 150க்கும் மேற்பட்டோர் வசித்து வந்தனர்.
இந்நிலையில், இந்த அடுக்குமாடி குடியிருப்பில் இன்று அதிகாலை பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. தீ மளமளவென அடுக்குமாடி குடியிருப்பின் பல்வேறு பகுதிகளுக்கும் பரவியது. அதிகாலை என்பதால் அனைவரும் உறங்கிக்கொண்டிருந்தனர்.
இந்த தீ விபத்து குறித்து தகவலறிந்த தீயணைப்புத்துறையினர் விரைந்து வந்து குடியிருப்பில் பற்றி எரிந்த தீயை அணைத்தனர். ஆனால், இந்த தீ விபத்தில் 49 பேர் உயிரிழந்தனர். உயிரிழந்தவர்களில் பெரும்பாலானோர் இந்தியர்கள் என தகவல் வெளியாகியுள்ளது.