< Back
உலக செய்திகள்
இந்திய போர்க்கப்பல் கொழும்பு துறைமுகம் சென்றது- 3 சீன போர்க்கப்பல்களும் வருகை
உலக செய்திகள்

இந்திய போர்க்கப்பல் கொழும்பு துறைமுகம் சென்றது- 3 சீன போர்க்கப்பல்களும் வருகை

தினத்தந்தி
|
27 Aug 2024 8:32 AM IST

சீன கடற்படையின் 3 போர்க்கப்பல்களும் அதே கொழும்பு துறைமுகம் வந்தன. அவை அங்கு நங்கூரமிட்டு நிறுத்தப்பட்டுள்ளன.

கொழும்பு,

இந்திய கடற்படை போர்க்கப்பலான 'ஐ.என்.எஸ்.மும்பை' 3 நாட்கள் பயணமாக நேற்று கொழும்பு துறைமுகம் சென்றடைந்தது. அந்த கப்பல், இலங்கையில் உள்ள துறைமுகத்துக்கு செல்வது இதுவே முதல்முறை. அதே சமயத்தில் இந்த ஆண்டு இலங்கை துறைமுகத்துக்கு இந்திய கப்பல் செல்வது இது 8-வது தடவை ஆகும். 163 மீட்டர் நீளம் கொண்ட இக்கப்பலில் 410 ஊழியர்கள் உள்ளனர். கடற்படை வழக்கப்படி, இலங்கை கடற்படை வரவேற்பு அளித்தது.

3 நாட்களும் ஊழியர்கள் இலங்கையை சுற்றி பார்ப்பார்கள். இலங்கை கடற்படையுடன் சேர்ந்து, யோகா, கடற்கரையை சுத்தப்படுத்துதல் போன்ற பணிகளையும் செய்வார்கள். 29-ந் தேதி கப்பல் அங்கிருந்து புறப்படும். முன்னதாக, நேற்று காலை சீன கடற்படையின் 3 போர்க்கப்பல்களும் அதே கொழும்பு துறைமுகம் வந்தன. அவை அங்கு நங்கூரமிட்டு நிறுத்தப்பட்டுள்ளன.

மேலும் செய்திகள்