< Back
உலக செய்திகள்
பிரான்ஸ் அதிபர், அமெரிக்க துணை ஜனாதிபதியுடன் மோடி சந்திப்பு
உலக செய்திகள்

பிரான்ஸ் அதிபர், அமெரிக்க துணை ஜனாதிபதியுடன் மோடி சந்திப்பு

தினத்தந்தி
|
11 Feb 2025 1:53 PM IST

விருந்து நிகழ்வில் பிரதமர் மோடியை பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரான் கட்டித்தழுவி வரவேற்றார்.

இந்திய பிரதமர் நரேந்திர மோடி, பிரான்ஸ் நாட்டில் 3 நாட்கள் அரசு முறை பயணம் மேற்கொண்டுள்ளார். பிரான்ஸ் தலைநகர் பாரீஸ் நகரில் உள்ள எலிசி அரண்மனையில் பிரதமர் மோடிக்கு வரவேற்பு விருந்து அளிக்கப்பட்டது. இந்நிகழ்வில் பிரதமர் மோடியை பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரான் கட்டித்தழுவி வரவேற்றார்.

இந்த சந்திப்பு பற்றி மோடி தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். அதில், "எனது நண்பரான மேக்ரானை பாரிசில் சந்தித்ததில் மகிழ்ச்சி அடைகிறேன்" என குறிப்பிட்டுள்ளார்.

இந்த விருந்து நிகழ்ச்சியில் அமெரிக்க துணை ஜனாதிபதி ஜே.டி.வான்சையும் மோடி சந்தித்தார். அமெரிக்காவின் டிரம்ப் நிர்வாகத்தில் உள்ள உயர் தலைவர் ஒருவரை மோடி சந்திப்பது இதுவே முதல் முறையாகும். இந்த சந்திப்பின்போது வான்சுக்கு கைகுலுக்கி தேர்தலில் வெற்றி பெற்றதற்கு வாழ்த்து தெரிவித்தார்.

பிரான்சில் அந்நாட்டு அதிபா் இம்மானுவேல் மேக்ரானுடன் சா்வதேச செயற்கை நுண்ணறிவு செயல்பாட்டு உச்சி மாநாட்டில் மோடி பங்கேற்கவுள்ளார். மேலும் பிரான்ஸ் அதிபருடன் இருதரப்பு பேச்சுவார்த்தை, வணிக நிறுவன தலைவர்களுடன் சந்திப்பு போன்ற நிகழ்ச்சிகளிலும் பங்கேற்கிறார்.

மேலும் செய்திகள்