
இந்திய வம்சாவளியை சேர்ந்த சந்திரா ஆர்யா கனடா பிரதமர் பதவிக்கு போட்டி

இந்திய வம்சாவளியை சேர்ந்த சந்திரா ஆர்யா கனடா பிரதமர் பதவிக்கு போட்டியிடுகிறார்.
கனடாவில் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவின் செயல்பாடுகளால் சொந்த கட்சியினரே அதிருப்தி அடைந்தனர். அவருக்கு எதிர்ப்புகள் வலுக்கவே வேறு வழியில்லாமல் தனது பிரதமர் பதவியை ராஜினாமா செய்வதாக அண்மையில் அறிவித்தார். புதிய பிரதமர் பதவியேற்கும் வரை பொறுப்பில் இருப்பதாக கனடா பிரதமர் கூறியுள்ளார்.
லிபரல் கட்சியின் தலைவராக தேர்வு செய்யப்படுபவர், அக்கட்சி சார்பில் கனடா பிரதமராக தேர்வு செய்யப்படுவார் என்பதால், கட்சித் தலைமை பொறுப்பை ஏற்க அங்கு கடும் போட்டி நிலவுகிறது. ஆளும் லிபரல் கட்சியின் மூத்த தலைவர்கள் மார்க் கார்னி, கிறிஸ்டியா பிரீலேண்ட் உள்ளிட்டோர் பிரதமர் பதவிக்கு போட்டியிடுவதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.
இந்தியாவை பூர்விகமாகக் கொண்ட அனிதா ஆனந்த் பிரதமர் பதவிக்கு போட்டியிட முடிவு செய்திருந்தார். ஆனால் அவர் திடீரென போட்டியில் இருந்து விலகிவிட்டார். இந்த சூழலில் இந்திய வம்சாவளியை சேர்ந்த கனடா எம்பி சந்திரா ஆர்யா பிரதமர் பதவிக்கு போட்டியிட மனு தாக்கல் செய்துள்ளார். இதற்கான வேட்புமனுவை தாக்கல் செய்த சந்திரா ஆர்யா , அந்நாட்டு நாடாளுமன்ற கூட்டத்தில் தனது தாய்மொழியான கன்னடத்தில் உரை நிகழ்த்தினார்.