< Back
உலக செய்திகள்
இந்தியா உலகத்திற்கு புத்தரை கொடுத்துள்ளது, யுத்தத்தை கொடுக்கவில்லை - பிரதமர் மோடி
உலக செய்திகள்

இந்தியா உலகத்திற்கு புத்தரை கொடுத்துள்ளது, யுத்தத்தை கொடுக்கவில்லை - பிரதமர் மோடி

தினத்தந்தி
|
11 July 2024 5:28 AM IST

இந்தியா உலகத்திற்கு புத்தரை கொடுத்துள்ளது, யுத்தத்தை கொடுக்கவில்லை என்று பிரதமர் மோடி கூறினார்.

வியன்னா,

ரஷிய பயணத்தை முடித்துக்கொண்டு பிரதமர் மோடி 2 நாள் பயணமாக ஆஸ்திரியா சென்றார். அங்கு அந்நாட்டு அதிபர் அலெக்சாண்டர் வான்டர் பெல்லன் மற்றும் பிரதமர் கார்ல் நெகம்மரை இந்திய பிரதமர் மோடி சந்தித்தார்.

இந்த சந்திப்பின்போது இருநாட்டு உறவு, வர்த்தகம் உள்பட பல்வேறு விவகாரங்கள் குறித்து ஆலோசிக்கப்பட்டது.

இதனை தொடர்ந்து ஆஸ்திரியாவாழ் இந்தியர்களை பிரதமர் மோடி சந்தித்தார். ஆஸ்திரியாவாழ் இந்தியர்கள் மத்தியில் பிரதமர் மோடி பேசியதாவது,

பல ஆயிரம் ஆண்டுகளாக நாம் நமது திறமை, அறிவை பகிர்ந்து வருகிறோம். நாம் உலகிற்கு புத்தரை (புத்த மதம் துறவி) கொடுத்துள்ளோம், யுத்தத்தை (போர்) கொடுக்கவில்லை. இந்தியா எப்போதும் அமைதி மற்றும் வளர்ச்சியை கொடுக்கிறது. இதனால் 21ம் நூற்றாண்டில் இந்தியா வலிமைபெற்று வருகிறது. எனது ஆஸ்திரிய பயணம் மிகவும் அர்த்தமுள்ளதாக அமைந்தது. 41 ஆண்டுகால காத்திருப்பு வரலாற்று சிறப்புமிக்க நிகழ்ச்சியால் நிறைவுக்கு வந்துள்ளது. இந்தியாவும் ஆஸ்திரியாவும் 75 ஆண்டுகால நட்பை கொண்டாடுகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்