< Back
உலக செய்திகள்
தென்கொரியாவில் கடும் பனிப்பொழிவு - இயல்பு வாழ்க்கை பாதிப்பு

Photo Credit: AFP

உலக செய்திகள்

தென்கொரியாவில் கடும் பனிப்பொழிவு - இயல்பு வாழ்க்கை பாதிப்பு

தினத்தந்தி
|
28 Nov 2024 12:02 AM IST

தென்கொரியாவில் கடுமையான பனிப்பொழிவு நிலவி வருவதால் மக்களின் இயல்பு வாழ்க்கை முடங்கியுள்ளது

சியோல்,

தென்கொரியாவில் குளிர்காலம் தொடங்கியுள்ளது. வருடம் தோறும் டிசம்பர் முதல் மார்ச் வரை அங்கு கடுமையான குளிர் நிலவும். தற்போது சற்று முன்பே குளிர்காலம் தொடங்கியிருக்கிறது. இதனால், அங்குள்ள குவாங்கன், வடக்கு சங்சியாங், வடக்கு ஜிலாங் உள்ளிட்ட மாகாணங்களில் கடுமையான பனிப்பொழிவு நிலவுகிறது.

பனிப்புயல் உருவாகி வலுப்பெற்று வருவதால், தலைநகர் சியோல், இன்ஞ்சியான் உள்ளிட்ட நகரங்களில் அவசரநிலை பிறப்பிக்கப்பட்டது. இதனால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பள்ளி, கல்லூரிகள் சில நாட்களாக மூடப்பட்டன.

கடந்த 50 ஆண்டுகளில் இல்லாத வகையில் அங்கு கடுமையான பனிப்பொழிவு நிலவி வருகிறது. வெப்பநிலை மைனஸ் 2 டிகிரியை கடந்தது.இதனால் சியோல் உள்பட அந்த நாட்டின் சர்வதேச விமான நிலையங்கள் முழுவதுமாக மூடப்பட்டன. ரயில் சேவையும் பாதிக்கப்பட்டது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்