< Back
உலக செய்திகள்
அகதிகளாக வசிக்கும் ஆப்கானியர்களை சொந்த நாட்டிற்கு திருப்பி அனுப்பிய ஜெர்மனி
உலக செய்திகள்

அகதிகளாக வசிக்கும் ஆப்கானியர்களை சொந்த நாட்டிற்கு திருப்பி அனுப்பிய ஜெர்மனி

தினத்தந்தி
|
30 Aug 2024 9:45 AM GMT

ஜெர்மனியில் அகதிகளாக வசிக்கும் ஆப்கானியர்களில் சிலர் சொந்த நாட்டிற்கு திருப்பி அனுப்பப்பட்டனர்.

பெர்லின்,

ஆப்கானிஸ்தானில் இருந்து கடந்த 2021ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் அமெரிக்க படைகள் வெளியேறின. உடனடியாக ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் ஆட்சியை கைப்பற்றினர். அதிபராக இருந்த அர்ஷப் கனி நாட்டை விட்டு தப்பிச்சென்றார். அதேபோல், தலிபான்கள் ஆட்சிக்கு பயந்து ஆயிரக்கணக்கான ஆப்கானியர்கள் ஐரோப்பிய நாடுகளுக்கு அகதிகளாக சென்றனர்.

அந்த வகையில் 4 லட்சத்திற்கும் மேற்பட்ட ஆப்கானியர்கள் ஜெர்மனியில் வசித்து வருகின்றனர். ஐரோப்பாவில் அதிக அளவிளான ஆப்கானிய அகதிகளை கொண்ட நாடுகளில் ஜெர்மனி முதல் இடத்தில் உள்ளது.

இதனிடையே, ஜெர்மனியின் சொலிங்ஜென் நகரில் கடந்த சில நாட்களுக்குமுன் கத்திக்குத்து தாக்குதல் நடத்தப்பட்டது. இந்த கத்திக்குத்து தாக்குதலில் 3 பேர் உயிரிழந்தனர். ஜெர்மனியில் அகதியாக வசித்து வந்த சிரியாவை சேர்ந்த இளைஞர் இந்த தாக்குதலை நடத்தியுள்ளார். அந்த இளைஞரை கைது செய்த போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தினர். விசாரணையில் அந்த இளைஞரை கடந்த ஆண்டே பல்கேரியாவுக்கு அனுப்ப அதிகாரிகள் திட்டமிட்டிருந்தனர். ஆனால், அந்த இளைஞர் தலைமறைவாக இருந்துள்ளார். அகதிகளாக வசித்து வரும் நபர்கள் ஜெர்மனியில் கத்திக்குத்து, துப்பாக்கி சூடு போன்ற பயங்கரவாத செயல்களில் ஈடுபடும் சம்பவங்கள் அதிகரித்து வருவதால் குற்றப்பின்னணி கொண்ட அகதிகளை சொந்த நாட்டிற்கு திருப்பி அனுப்பும் நடவடிக்கை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில், ஜெர்மனியில் அகதிகளாக வசித்து வரும் ஆப்கானியர்களில் 28 பேர் சொந்த நாட்டிற்கு திருப்பி அனுப்பப்பட்டனர். ஜெர்மனியில் குற்றச்செயல்களில் ஈடுபட்டு குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்ட 28 ஆப்கானியர்கள் நேற்று தங்கள் சொந்த நாட்டிற்கு திருப்பி அனுப்பப்பட்டுள்ளனர்.

மேலும் செய்திகள்