< Back
உலக செய்திகள்
தஜிகிஸ்தான்: சிறையில் இருந்து தப்ப முயன்ற 5 கைதிகள் சுட்டுக்கொலை
உலக செய்திகள்

தஜிகிஸ்தான்: சிறையில் இருந்து தப்ப முயன்ற 5 கைதிகள் சுட்டுக்கொலை

தினத்தந்தி
|
5 Feb 2025 11:23 AM IST

சிறைக் காவலர்களை கத்தி உள்ளிட்ட ஆயுதங்களால் தாக்கிவிட்டு கைதிகள் தப்ப முயன்றனர்.

துஷான்பே,

மத்திய ஆசிய நாடான தஜிகிஸ்தான் தலைநகர் துஷான்பேயில் உள்ள சிறைச்சாலையில் சில கைதிகளுக்கு இடையே கைகலப்பு ஏற்பட்டது. அப்போது ஏற்பட்ட வன்முறையில் கைதிகள் ஒருவரையொருவர் தாக்கிக் கொண்டனர். இதனை வாய்ப்பாக பயன்படுத்திக் கொண்டு சில கைதிகள் அங்கிருந்து தப்ப முயன்றனர்.

அவர்களை சிறைக் காவலர்கள் தடுத்தபோது, அவர்களை கத்தி உள்ளிட்ட ஆயுதங்களால் தாக்கினர். இந்த தாக்குதலில் 3 காவலர்கள் பலத்த காயமடைந்தனர். அவர்களை சக காவலர்கள் மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர்.

இதற்கிடையே சிறையில் இருந்து தப்ப முயன்ற கைதிகளை நோக்கி காவலர்கள் நடத்திய துப்பாக்கி சூட்டில் 5 கைதிகள் உயிரிழந்தனர்.

இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்திவருகின்றனர். கொல்லப்பட்ட கைதிகள் அனைவரும் ஐ.எஸ். பயங்கரவாத அமைப்புடன் தொடர்புடையவர்கள் என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது. இந்த அமைப்பு தஜிகிஸ்தானில் தடை செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்