< Back
உலக செய்திகள்
உலக செய்திகள்
பாகிஸ்தானில் துப்பாக்கி சூடு; 7 பேர் பலி
|7 Nov 2024 3:02 AM IST
பாகிஸ்தானில் லோயர் குர்ராம் பகுதியருகே பஸ்சை நோக்கி மர்ம நபர்கள் சிலர் துப்பாக்கி சூடு நடத்தியதில் 2 பேர் உயிரிழந்தனர்.
கைபர் பக்துன்குவா,
பாகிஸ்தான் நாட்டின் கைபர் பக்துன்குவா மாகாணத்தில் இரு வேறு சம்பவங்களில் 7 பேர் கொல்லப்பட்டனர். பெண் உள்பட 2 பேர் காயமடைந்தனர். இதில் முதல் சம்பவத்தில், பத்கேலா நகரில் பகதூராபாத் பகுதியில், 2 குழுக்கள் இடையே நடந்த மோதலில், இரு தரப்பினரும் துப்பாக்கிகளால் ஒருவரையொருவர் சுட்டு கொண்டனர்.
இந்த சம்பவத்தில் 5 பேர் பலியானார்கள். ஒருவர் காயமுற்றார். இதேபோன்று, குர்ராம் பழங்குடியின மாவட்டத்தில், லோயர் குர்ராம் பகுதியில் டேட் குமார் என்ற இடத்திற்கு அருகே பஸ்சை நோக்கி மர்ம நபர்கள் சிலர் துப்பாக்கி சூடு நடத்தினர். இதில் 2 பேர் உயிரிழந்தனர். பெண் ஒருவருக்கு காயம் ஏற்பட்டது. எனினும், சிகிச்சைக்கு பின்பு அவர் உடல்நலம் தேறி வருகிறார். இதுபற்றி விசாரணை நடந்து வருகிறது.