< Back
உலக செய்திகள்
உலக செய்திகள்
அணு ஆயுதம் தாங்கிய நீர்மூழ்கி கப்பல் கட்டும் தளத்தில் தீ விபத்து - அதிர்ச்சி சம்பவம்
|30 Oct 2024 5:39 PM IST
அணு ஆயுதம் தாங்கிய நீர்மூழ்கி கப்பல் கட்டும் தளத்தில் திடீர் தீ விபத்து ஏற்பட்டது.
லண்டன்,
இங்கிலாந்து கடற்படையில் அணு ஆயுதம் தாங்கிய நீர்மூழ்கி கப்பல்கள் உள்ளன. இந்த கப்பல்கள் கட்டு தலம் அந்நாடின் கம்பிரியா நகரின் பாரோ இன் பெர்னஸ் என்ற பகுதியில் அமைந்துள்ளது.
இந்நிலையில், கம்பிரியாவில் உள்ள அணு ஆயுதம் தாங்கிய நீர் மூழ்கி கப்பல் கட்டும் தளத்தில் நேற்று பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இந்த தீ விபத்தில் 2 பேர் காயமடைந்தனர்.
தகவலறிந்து விரைந்து வந்த தீயணைப்பு படையினர் கப்பல் கட்டும் தளத்தில் பற்றி எரிந்த தீயை அணைந்தனர். படுகாயமடைந்த 2 பேரும் மீட்கப்பட்டு சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளனர். மேலும், இந்த தீ விபத்தில் அணு கசிவு எதுவும் ஏற்படவில்லை என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.