< Back
உலக செய்திகள்
முன்னாள் ஊழியருக்கு ரூ. 5 கோடி இழப்பீடு அளிக்க எலான் மஸ்க்கிற்கு தீர்ப்பாயம் உத்தரவு
உலக செய்திகள்

முன்னாள் ஊழியருக்கு ரூ. 5 கோடி இழப்பீடு அளிக்க எலான் மஸ்க்கிற்கு தீர்ப்பாயம் உத்தரவு

தினத்தந்தி
|
16 Aug 2024 10:50 PM GMT

உரிய விசாரணையின்றி பணி நீக்கம் செய்யப்பட்ட முன்னாள் ஊழியருக்கு ரூ. 5 கோடி இழப்பீடு வழங்க வேண்டும் எலான் மஸ்க்கிற்கு அயர்லாந்து தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது.

வாஷிங்டன்,

உலக பெரும் பணக்காரரான எலான் மஸ்க் கடந்த 2022-ஆம் ஆண்டு பிரபல சமூக வலை தளமான ட்விட்டரை விலைக்கு வாங்கினார். இதையடுத்து, அந்த ட்விட்டர் நிறுவனத்தில் பல்வேறு மாற்றங்கள் செய்யபட்டன. ஊழியர்கள் பலரும் நீக்கப்பட்டனர்.

இந்த நிலையில், ட்விட்டர் நிறுவனத்தில் ரூனி என்பவர் கடந்த 2013-ம் ஆண்டு முதல் ‛எக்ஸ்‛ வலைதள நிறுவனத்தில் பணியாற்றி வந்தார். கடந்த 2022ம் ஆண்டு நவம்பரில் எந்தவித காரணமும் தெரிவிக்காமல் திடீரென இமெயில் வாயிலாக பணி நீக்கம் செய்யப்பட்டதாக ரூனிக்கு தெரிவிக்கப்பட்டது.

இது தொடர்பாக ரூனி அயர்லாந்தில் உள்ள பணியிட தொடர்பு கமிஷன் எனப்படும் தீர்ப்பாயத்தில் வழக்கு தொடர்ந்தார். வழக்கில் உரிய விசாரணையின்றி பணி நீக்கம் செய்த எலான் மஸ்க்கின் ‛எக்ஸ்‛ வலைதள நிறுவனத்திற்கு இந்திய மதிப்பில் ரூ. 5 கோடி இழப்பீடு வழங்க உத்தரவிட்டது.

மேலும் செய்திகள்