எலான் மஸ்க்கின் சொத்து மதிப்பு ரூ.33 லட்சம் கோடியை தாண்டியது
|எலான் மஸ்க்கின் சொத்து உலக வரலாற்றில் இதுவரை யாரும் தொடாத அளவுக்கு உயர்ந்துள்ளது.
வாஷிங்டன்,
டெஸ்லா, ஸ்பேஸ் எக்ஸ் உள்ளிட்ட நிறுவனங்களின் தலைவரான எலான் மஸ்க் உலக பணக்காரர்கள் பட்டியலில் கடந்த சில ஆண்டுகளாக முதலிடத்தில் உள்ளார். அமெரிக்க அதிபர் தேர்தலில் டொனால்டு டிரம்ப் வெற்றி பெற்ற பிறகு எலான் மஸ்க்கின் சொத்து மதிப்பு கிடுகிடுவென உயர்ந்து வருகிறது. டொனால்டு டிரம்பிற்கு ஆதரவாக மஸ்க் பிரசாரம் செய்த நிலையில், அவருக்கு டிரம்ப் நிர்வாகத்திலும் முக்கிய பொறுப்பு கொடுக்கப்பட்டுள்ளது.
இதுபோன்ற காரணங்களால் எலான் மஸ்க் நிறுவனத்திற்கு சொந்தமான பங்குகள் விலையேற்றத்தை சந்தித்தன. இதனால், உலக வரலாற்றில் யாரும் தொட்டிராத சொத்து மதிப்பை கடந்த மாத இறுதியில் எலான் மஸ்க் தொட்டு இருந்தார். ரூ.29 லட்சம் கோடியாக எலான் மஸ்க் சொத்து மதிப்பு உயர்ந்த நிலையில், தற்போது அவரது சொத்து மதிப்பு ரூ.33 லட்சம் கோடியாக அதிகரித்துள்ளது. அமெரிக்க மதிப்பில் சுமார் 400 பில்லியன் டாலராக உயர்ந்துள்ளது.