< Back
உலக செய்திகள்
12-வது குழந்தை ரகசியம் குறித்து  எலான் மஸ்க் விளக்கம்
உலக செய்திகள்

12-வது குழந்தை ரகசியம் குறித்து எலான் மஸ்க் விளக்கம்

தினத்தந்தி
|
25 Jun 2024 8:47 PM IST

சமீபத்தில் எலான் மஸ்க் 12-வது குழந்தைக்கு தந்தையானார் என தகவல்கள் வெளியாகின.

வாஷிங்டன்,

உலக பணக்காரர்களில் ஒருவரும், எக்ஸ் வலைதளம், மற்றும் டெஸ்லா உள்ளிட்ட நிறுவனங்களின் தலைவராகவும் இருந்து வருபவர் எலான் மஸ்க். இவருக்கு ஏற்கனவே 2 மனைவிகள் உள்ளனர். இந்தநிலையில் இவர் தன்னுடைய நிறுவனமான நியூராலிங்க் ஊழியர் ஹிவோன் சிலிசுடன் திருமணம் செய்து கொள்ளாமல் ரகசியமாக குடும்பம் நடத்தி வருகிறார்.

3 மனைவிகள் மூலம் 11 குழந்தைகள் பிறந்தன. சமீபத்தில் எலான் மஸ்க் 12-வது குழந்தைக்கு தந்தையானார் என தகவல்கள் வெளியாகின. ஹிவான் சிலிசுக்கு பிறந்த இந்த குழந்தையின் பாலினம் மற்றும் பெயர் விவரம் குறித்து வெளியிடப்படவில்லை.

இது ரகசியமாக வைக்கப்பட்டிருந்தது. தற்போது 12-வது குழந்தையை வரவேற்பதாக எலான் மஸ்க் தெரிவித்துள்ளார். இதில் எந்த ரகசியமும் இல்லை. எங்கள் நண்பர்கள் மற்றும் குடும்பத்தினர் அனைவருக்கும் இது தெரியும் என அவர் விளக்கம் அளித்துள்ளார். இந்த தகவல் புளூம் வர்க் நிறுவன அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்