உலக செய்திகள்
உலக செய்திகள்
காசாவில் இஸ்ரேல் தாக்குதல்: ஹமாஸ் பயங்கரவாதிகள் 12 பேர் பலி
|5 Jan 2025 10:51 PM IST
காசாவில் இஸ்ரேல் ராணுவம் நடத்திய தொடர் தாக்குதலில் ஹமாஸ் பயங்கரவாதிகள் 12 பேர் பலியாகினர்.
காசா,
இஸ்ரேலுக்கும், பாலஸ்தீனத்தின் காசா பகுதியை ஆளும் ஹமாஸ் பயங்கரவாதிகளுக்கும் இடையே, ஓராண்டுக்கும் மேலாக போர் நடைபெற்று வருகிறது. ஹமாஸ்-இஸ்ரேல் இடையிலான போரில் காசாவில் 45 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். ஆனால் இன்னும் போரின் தாக்கம் குறையவில்லை. இதனால் பலர் தெற்கு காசாவில் உள்ள பாதுகாப்பான பகுதி என அறிவிக்கப்பட்டுள்ள இடங்களுக்கு இடம்பெயர்ந்தனர்.
இந்த நிலையில், காசாவில் 100க்கும் மேற்பட்ட இடங்களை குறிவைத்து இஸ்ரேல் ராணுவம் வான்வழி தாக்குதல் நடத்தியுள்ளது. இதில், 12 ஹமாஸ் பயங்கரவாதிகள் கொல்லப்பட்டுள்ளனர். கடந்த 24 மணிநேரத்தில் மட்டும் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் 88 பாலஸ்தீனர்கள் கொல்லப்பட்டுள்ளதாகவும், 200க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளதாக ஹமாஸ் தரப்பில் கூறப்பட்டுள்ளது.