உலக செய்திகள்
உலக செய்திகள்
ஈகுவடாரில் உள்நாட்டு கலவரம் ராணுவ அவசர நிலை பிரகடனம்
|5 Jan 2025 5:09 AM IST
ஈகுவடாரில் உள்ள 7 மாகாணங்களில் உள்நாட்டு கலவரம் நிலவுகிறது.
குயிட்டோ,
தென் அமெரிக்க நாடான ஈகுவடாரில் பல கிளர்ச்சி குழுக்கள் செயல்படுகின்றன. அவற்றில் பல ஆயுத கும்பலை பயங்கரவாத அமைப்பாக அரசாங்கம் அறிவித்துள்ளது. அவர்கள் பொது சொத்துகளை சேதப்படுத்துதல், அப்பாவி மக்கள் மீது தாக்குதல் நடத்துவதால் அரசாங்கத்துக்கு பெரும் அச்சுறுத்தலாக உள்ளனர்.
இதன் காரணமாக குவாயாஸ், லாஸ் ரியோஸ், மனாபி உள்ளிட்ட 7 மாகாணங்களில் உள்நாட்டு கலவரம் நிலவுகிறது. எனவே அந்த மாகாணங்களுக்கு ராணுவ அவசர நிலை பிறப்பித்து அதிபர் டேனியேல் நோபோவா உத்தரவிட்டுள்ளார். மேலும் 20 மாகாணங்களில் இரவு நேர ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டு உள்ளது. இதனால் அதிபர் மாளிகை உள்ளிட்ட முக்கிய பகுதியில் போலீசார் மற்றும் ராணுவ வீரர்கள் குவிக்கப்பட்டு உள்ளனர்.