< Back
உலக செய்திகள்
உலக செய்திகள்
மியான்மரில் நிலநடுக்கம் - ரிக்டர் அளவில் 4.2 ஆக பதிவு
|14 Dec 2024 2:56 PM IST
மியான்மரில் ரிக்டர் 4.2 அளவில் லேசான நிலநடுக்கம் ஏற்பட்டது.
நெய்பிடாவ்,
மியான்மரில் லேசான நிலநடுக்கம் ஏற்பட்டதாக தேசிய நில அதிர்வு ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மியான்மரில் இன்று காலை 6.30 மணியளவில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 4.2 ஆக பதிவானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
70 கி.மீ. ஆழத்தில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம், 25.47 டிகிரி வடக்கு அட்சரேகையிலும், 97.02 டிகிரி கிழக்கு தீர்க்கரேகையிலும் இருக்கும் என முதலில் தீர்மானிக்கப்பட்டது. நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதம் மற்றும் பாதிப்பு குறித்து எந்தவித தகவலும் வெளியாகவில்லை. முன்னதாக, மியான்மரில் கடந்த நவம்பர் மாதம் 26-ம் தேதி 4.4 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் பதிவானது என்பது குறிப்பிடத்தக்கது.