< Back
உலக செய்திகள்
உலக செய்திகள்
ஆப்கானிஸ்தானில் நிலநடுக்கம்; ரிக்டரில் 5.1 ஆக பதிவு
|19 Jun 2024 12:50 PM IST
ஆப்கானிஸ்தானில் இன்று காலை ரிக்டர் 5.1 அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது.
காபுல்,
ஆப்கானிஸ்தானின் கிழக்கு பகுதியில் இன்று காலை 8.47 மணிக்கு நிலநடுக்கம் ஏற்பட்டது. அங்குள்ள லக்மன் மாகாணத்தின் தலைநகரான மெஹ்தர்லாமுக்கு வடகிழக்கே 33 கிமீ தொலைவில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டதாக ஐரோப்பிய-மத்திய தரைக்கடல் நில அதிர்வு மையம் (EMSC) தெரிவித்துள்ளது.
இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 5.1 ஆக பதிவாகியுள்ளது. இந்த நிலநடுக்கத்தின் மையமானது தரைமட்டத்தில் இருந்து சுமார் 35 கி.மீ. ஆழத்தில் அமைந்திருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.