< Back
உலக செய்திகள்
உலக செய்திகள்
ஆப்கானிஸ்தானில் நிலநடுக்கம்: ரிக்டரில் 4.5 ஆக பதிவு
|18 Nov 2024 8:59 AM IST
ஆப்கானிஸ்தானில் இன்று அதிகாலை ஏற்பட்ட நிலநடுக்கம் 15 கி.மீ. ஆழத்தில் மையம் கொண்டிருந்தது.
காபூல்,
ஆப்கானிஸ்தான் நாட்டில் இன்று அதிகாலை 2.15 மணியளவில் மித அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 4.5 ஆக பதிவாகி உள்ளது.
இந்நிலநடுக்கம் 15 கி.மீ. ஆழத்தில் மையம் கொண்டிருந்தது. இதனை தேசிய நிலநடுக்க அறிவியல் மையம் தெரிவித்து உள்ளது. இதனால் ஏற்பட்ட பொருளிழப்புகள் உள்ளிட்ட விவரங்கள் எதுவும் உடனடியாக வெளியிடப்படவில்லை.