< Back
உலக செய்திகள்
ஆப்கானிஸ்தானில் நிலநடுக்கம்: ரிக்டரில் 4.3 ஆக பதிவு
உலக செய்திகள்

ஆப்கானிஸ்தானில் நிலநடுக்கம்: ரிக்டரில் 4.3 ஆக பதிவு

தினத்தந்தி
|
2 Jan 2025 12:48 PM IST

ஆப்கானிஸ்தானில் காலை 9.23 மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது.

காபுல்,

ஆப்கானிஸ்தானில் இன்று காலை திடீர் நிலநடுக்கம் ஏற்பட்டது. காலை 9.23 மணியளவில் (இந்திய நேரப்படி) ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 4.3 ஆக பதிவானதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது.

120 கி.மீ. ஆழத்தில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம், 36.53 டிகிரி வடக்கு அட்சரேகையிலும், 67.77 டிகிரி கிழக்கு தீர்க்கரேகையிலும் இருக்கும் என முதலில் தீர்மானிக்கப்பட்டது. இந்த நிலநடுக்கத்தால் உயிரிழப்பு எதுவும் ஏற்பட்டதாகத் தகவல் வெளியாகவில்லை. அதேபோல பொருள் சேதம் குறித்தும் இதுவரை அதிகாரப்பூர்வ தகவல் வெளியிடப்படவில்லை.

மேலும் செய்திகள்