< Back
உலக செய்திகள்
ஜெர்மனி அதிபருடன் இந்திய வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு
உலக செய்திகள்

ஜெர்மனி அதிபருடன் இந்திய வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

தினத்தந்தி
|
12 Sept 2024 1:50 AM IST

ஜெர்மனி அதிபர் ஓலாப் ஸ்கால்சை இந்திய வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர் சந்தித்தார்.

பெர்லின்,

இந்திய வெளியுறவுத்துறை மந்திரி 6 நாட்கள் சுற்றுப்பயணமாக சவுதி அரேபியா, ஜெர்மனி, சுவிட்சர்லாந்து ஆகிய நாடுகளுக்கு சென்றுள்ளார். அவர் சவுதி அரேபியா பயணத்தை முடித்துவிட்டு ஜெர்மனி சென்றார்.

இந்நிலையில், ஜெர்மனி அதிபர் ஓலாப் ஸ்கால்சை வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர் நேற்று சந்தித்தார். இந்த சந்திப்பின்போது இருநாட்டு உறவு குறித்து ஆலோசிக்கப்பட்டது. ஜெர்மனி பயணத்தை முடித்துக்கொண்டு ஜெய்சங்கர் சுவிட்சர்லாந்து செல்ல உள்ளார்.

மேலும் செய்திகள்