< Back
உலக செய்திகள்
உலக செய்திகள்
அமெரிக்க விமானப்படைத்தளம் அருகே பறந்த மர்ம டிரோன்கள் - பரபரப்பு சம்பவம்
|17 Dec 2024 4:18 AM IST
அமெரிக்க விமானப்படைத்தளம் அருகே மர்ம டிரோன்கள் பறந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
வாஷிங்டன்,
அமெரிக்காவின் ஒஹியோ மாகாணத்தில் விமானப்படைத்தளம் உள்ளது. அம்மாகாணத்தின் டேடன் நகரில் அமைந்துள்ள இந்த விமானப்படைத்தளம் உலகின் மிகப்பெரிய விமானப்படைத்தளங்களில் ஒன்றாகும்.
இந்நிலையில், கடந்த வெள்ளிக்கிழமை இரவு முதல் விமானப்படைதளத்தின் அருகே மர்ம டிரோன்கள் பறந்துகொண்டிருக்கின்றன. இந்த டிரோன்களை பறக்கவிட்டது யார் என்பது குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
இந்த சம்பவம் தொடர்பாக இதுவரை 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும், விமானப்படைத்தளம் அருகே பாஸ்டன் சர்வதேச விமான நிலையமும் உள்ளது. தற்போதுவரை அப்பகுதியில் டிரோன்கள் பறந்துகொண்டிருப்பதால் அந்த வான்பரப்பில் விமானங்கள் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. டிரோன்களை சுட்டு வீழ்த்தலாமா? என்பது குறித்தும் அதிகாரிகள் ஆலோசித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.