< Back
உலக செய்திகள்
உலக செய்திகள்
அமெரிக்க அதிபர் தேர்தல்: பிரெஞ்ச் பிரைஸ் தயாரித்து வாக்கு சேகரித்த டொனால்டு டிரம்ப்
|21 Oct 2024 10:28 AM IST
அமெரிக்க அதிபர் தேர்தலில் குடியரசு கட்சி சார்பில் போட்டியிடும் டொனால்டு டிரம்ப் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார்.
பென்சில்வேனியா,
அடுத்த மாதம் அமெரிக்காவில் அதிபர் தேர்தல் நடக்க உள்ளது. இதில் குடியரசுக் கட்சி சார்பாக முன்னாள் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் மீண்டும் களம் காண்கிறார். தேர்தல் பிரசாரத்திற்காக, பென்சில்வேனியா சென்ற டிரம்ப் மக்களின் வாக்குகளை ஈர்ப்பதற்காக பிரெஞ்ச் பிரைஸ் செய்து, அதை நேர்த்தியாக பேக் செய்துள்ளார்.
இது தொடர்பாக தனது 'எக்ஸ்' தளத்தில் டிரம்ப் வெளியிட்டுள்ள காணொளியில், மெக் டொனால்ட்ஸ் நிர்வாகியிடம், "எனக்கு வேலை வேண்டும். எனக்கு மெக் டொனால்ட்ஸ் கடையில் வேலை செய்ய வேண்டும் என்பது ஆசை" என்று டிரம்ப் கேட்கிறார். பின்னர் பிரெஞ்ச் பிரைஸ் தயாரித்து, வாடிக்கையாளருக்கு விநியோகம் செய்து வாக்கு சேகரித்தார். அவரைக் காண ஆயிரக் கணக்கானோர் அங்கு திரண்டு வந்திருந்தனர்.