இதை எப்படி செய்வது என உனக்கு தெரியுமா? ரோபோவுடன் விளையாடிய நடிகை
|ரோபோவுடன் கலந்துரையாடிய அவர் அதனுடன் ராக்- பேப்பர்- சிசர்' விளையாடுவது போன்ற காட்சிகள் பயனர்களை பெரிதும் கவர்ந்துள்ளது.
டெக்ஸாஸ் ,
உலக கோடீஸ்வரர்களில் ஒருவரான எலான் மஸ்க் மனித உருவ ரோபோவை வடிவமைத்துள்ளார். ஆப்டிமஸ் என பெயரிடப்பட்டுள்ள இந்த ரோபோவை அமெரிக்காவை சேர்ந்த "பிரபல கோடீஸ்வர பெண், சோசியலிட், மாடல், நடிகை, தொழிலதிபர்,என பன்முகதன்மை கொண்ட கிம் கர்தாஷியன் தனது சமூக வலைதள பக்கத்தில் அறிமுகம் செய்தார்.
மேலும் அந்த ரோபோவுடன் உரையாடி, விளையாடிய காட்சிகளை தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டிருந்தார். தற்போது வீடியோ வைரலாகி கோடிக்கணக்கான பார்வைகளை குவித்து வருகிறது. அந்த வீடியோவில், கிம் கர்தாஷியன் தனது ரசிகர்களுக்கு தனது புதிய நண்பர் எனக்கூறி ஆப்டிமஸ் ரோபோவை அறிமுகம் செய்கிறார். பின்னர் அந்த ரோபோவுடன் கலந்துரையாடிய அவர் அதனுடன் ராக்- பேப்பர்- சிசர்' விளையாடுவது போன்ற காட்சிகள் பயனர்களை பெரிதும் கவர்ந்துள்ளது. மேலும் ஆப்டிமஸ் ரோபோ 'ராக்- பேப்பர்- சிசர்' விளையாடிய போது அதன் கைகளை உயர்த்தி சம்மதம் தெரிவிக்கிறது. தொடர்ந்து கிம் கர்தாஷியன் ரோபோவை கிண்டல் செய்கிறார்.
அப்போது அவரை ஆச்சரியப்படுத்தும் வகையில் ரோபோ லவ் சிம்பல் காட்டியது. உடனே கிம் கர்தாஷியன் ஆச்சரியத்தில் திகைத்து இதை எப்படி செய்வது என உனக்கு தெரியுமா? என ஆச்சரியமாக கேட்கிறார். இந்த வீடியோவை பயனர்கள் பலரும் ஆப்டிமசின் திறமையை கண்டு வியந்து பகிர்ந்து வருகின்றனர்.