< Back
உலக செய்திகள்
வங்காளதேசத்தில் பரவும் டெங்கு காய்ச்சல்: ஒரேநாளில் 8 பேர் பலி
உலக செய்திகள்

வங்காளதேசத்தில் பரவும் டெங்கு காய்ச்சல்: ஒரேநாளில் 8 பேர் பலி

தினத்தந்தி
|
17 Nov 2024 8:29 PM IST

வங்காளதேசத்தில் டெங்கு காய்ச்சலுக்கு நேற்று ஒரேநாளில் 8 பேர் உயிரிழந்தனர்.

டாக்கா,

வங்காளதேசத்தில் டெங்கு காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது. டெங்குவை கட்டுப்படுத்த அந்நாட்டு சுகாதாரத்துறை தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது.

இந்நிலையில், டெங்கு காய்ச்சலுக்கு அந்நாட்டில் நேற்று ஒரேநாளில் 8 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், 994 பேருக்கு புதிதாக டெங்கு காய்ச்சல் உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் வங்காளதேசத்தில் டெங்குவுக்கு சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 4 ஆயிரத்து 173ஆக அதிகரித்துள்ளது.

அதேவேளை, வங்காளதேசத்தில் நடப்பு ஆண்டில் டெங்கு காய்ச்சலுக்கு உயிரிழந்தோர் எண்ணிக்கை 407 ஆக அதிகரித்துள்ளது.

மேலும் செய்திகள்