ஸ்பெயினில் கனமழை, வெள்ளம்: பலி எண்ணிக்கை 205 ஆக உயர்வு
|ஸ்பெயினில் பெய்த கனமழையால் ஏற்பட்ட திடீர் வெள்ளத்தில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 205 ஆக அதிகரித்துள்ளது.
மாட்ரிட்,
ஸ்பெயின் நாட்டின் வெலன்சியா மாகாணத்தில் கடந்த புதன்கிழமை திடீரென கனமழை பெய்தது. ஓராண்டு பெய்ய வேண்டிய மழை சில மணிநேரங்களில் கொட்டித்தீர்த்தது.
கனமழை காரணமாக பல்வேறு ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. வெள்ளம் நகரின் பல்வேறு பகுதிகளை சூழ்ந்தது. இதன் காரணமாக பொதுமக்கள் பெரும் அவதியடைந்தனர். மேலும், சாலை போக்குவரத்து, ரெயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
இந்நிலையில், கனமழை காரணமாக ஆறுகளில் ஏற்பட்ட திடீர் வெள்ளப்பெருக்கில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 205 ஆக அதிகரித்துள்ளது. 100க்கும் பலர் படுகாயமடைந்தனர். அதேவேளை, கனமழை காரணமாக பல பகுதிகளில் நிலச்சரிவும் ஏற்பட்டது. வீடுகளில் வெள்ள நீர் சூழ்ந்துள்ள நிலையில் மீட்பு பணிகள் துரிதமாக நடைபெற்று வருகிறது. மீட்பு பணியில் ராணுவம் களமிறக்கப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட மக்கள் முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். அதேவேளை, வெலன்சியா மாகாணத்தில் தொடர்ந்து கனமழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.