< Back
உலக செய்திகள்
பாகிஸ்தானில் பழங்குடியின குழுக்கள் இடையே தொடர் மோதல்:  76 பேர் பலி
உலக செய்திகள்

பாகிஸ்தானில் பழங்குடியின குழுக்கள் இடையே தொடர் மோதல்: 76 பேர் பலி

தினத்தந்தி
|
28 Nov 2024 8:22 AM IST

பாகிஸ்தானில் பழங்குடியின குழுக்கள் இடையே ஏற்பட்ட தொடர் மோதல்களில் 76 பேர் பலியாகி உள்ளனர். பலர் காயமடைந்து உள்ளனர்.

கைபர் பக்துன்குவா,

பாகிஸ்தான் நாட்டின் கைபர் பக்துன்குவா மாகாணத்தின் லோயர் குர்ரம் மாவட்டத்தில் பழங்குடியின குழுக்கள் இடையே தொடர்ந்து மோதல் ஏற்பட்டு வருகிறது. ஒரு வாரத்திற்கும் மேலாக நடந்து வரும் இந்த மோதலில் பலர் பலியாகி வருகின்றனர்.

சமீபத்தில், வாகனம் ஒன்றில் சென்று கொண்டிருந்த 40 பேர் மீது திடீரென மறைந்திருந்து தாக்குதல் நடத்தப்பட்டு உள்ளது. மண்டோரி சார்கெல் பகுதியில் நடத்தப்பட்ட இந்த தாக்குதலில் 40 பேரும் உயிரிழந்தனர். இதனை தொடர்ந்து 2 நாட்கள் கழித்து, இதே மாவட்டத்தின் பகன் கிராம பகுதியில் மற்றொரு தாக்குதல் சம்பவம் நடந்தது.

துப்பாக்கி சூடு மற்றும் தீ வைப்பு உள்ளிட்ட தாக்குதல்களில் 21 பேர் பலியானார்கள். இதனை தொடர்ந்து, அதிகாரிகள் அந்த பகுதிக்கு சென்று சமரசத்திற்கான போர்நிறுத்த ஒப்பந்தம் ஒன்றை ஏற்படுத்தினார்கள். எனினும், நேற்று முன்தினம் மீண்டும் மோதல் வெடித்தது.

கோஜாகரி, மதசாநகர் மற்றும் குஞ்ச் அலிஜாய் ஆகிய பகுதிகளில் ஏற்பட்ட மோதல்களில் 3 பேர் உயிரிழந்து உள்ளனர். 6 பேர் காயமடைந்து உள்ளனர். இதனையடுத்து, வன்முறை சம்பவத்திற்கு மொத்த பலி எண்ணிக்கை 76 ஆக உயர்ந்து உள்ளது. பலர் காயமடைந்து உள்ளனர். அவர்கள் சிகிச்சைக்கு கொண்டு செல்லப்பட்டனர். இதனால், அந்த பகுதியில் மீண்டும் பதற்றம் ஏற்பட்டு உள்ளது.

மேலும் செய்திகள்