< Back
உலக செய்திகள்
அமெரிக்காவில் சிறையில் இருந்து தப்பி ஓடிய சீன இளம்பெண் கைது
உலக செய்திகள்

அமெரிக்காவில் சிறையில் இருந்து தப்பி ஓடிய சீன இளம்பெண் கைது

தினத்தந்தி
|
13 Dec 2024 8:08 AM IST

அமெரிக்காவில் சிறையில் இருந்து தப்பி ஓடிய சீன இளம்பெண் கைது செய்யப்பட்டுள்ளார்.

வாஷிங்டன்,

அமெரிக்காவின் அலபாமா மாகாணத்தில் உள்ள ஒரு தேவாலயத்தில் கடந்த 2021-ம் ஆண்டு துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டது. இதனையடுத்து துப்பாக்கிச்சூடு நடத்தியதாக ஜியாவோகின் யான் (வயது 30) என்ற சீன இளம்பெண்ணை போலீசார் கைது செய்தனர். இதுதொடர்பான வழக்கில் அவருக்கு 9 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது.

அதன்பேரில் டான்பரி நகரில் உள்ள சிறையில் அவர் அடைக்கப்பட்டுள்ளார். இந்தநிலையில் ஜியாவோகின் திடீரென சிறையில் இருந்து தப்பி ஓடினார். இதனையடுத்து போலீசார் அவரை தேடும் பணி முடுக்கி விடப்பட்டது. சுமார் 7 மணி நேர தேடுதலுக்கு பிறகு அந்த இளம்பெண்ணை போலீசார் மீண்டும் கைது செய்தனர்.

மேலும் செய்திகள்