< Back
உலக செய்திகள்

உலக செய்திகள்
தைவான் எல்லையில் சீனா மீண்டும் ராணுவ பயிற்சி

28 Feb 2025 4:45 AM IST
தைவான் கடற்பகுதியில் சீன ராணுவம் துப்பாக்கிச்சூடு பயிற்சியில் ஈடுபட்டது.
தைபே நகரம்,
சீனாவின் கட்டுப்பாட்டில் இருந்த தைவான் 1949-ல் தனிநாடாக பிரிந்தது. ஆனால் தைவானை இன்னும் தனது நாட்டின் ஒரு பகுதியாகவே சீனா கருதுகிறது. எனவே அதனை மீண்டும் தன்னுடன் இணைக்க போர்ப்பயிற்சியை நடத்தி சீனா பதற்றத்தை தூண்டுகின்றது.
அதன் ஒருபகுதியாக தைவான் கடற்பகுதியில் சீன ராணுவம் துப்பாக்கிச்சூடு பயிற்சியில் ஈடுபட்டது. மேலும் கடந்த ஒரு நாளில் 14 சீன போர்க்கப்பல் மற்றும் 45 விமானங்கள் தைவான் எல்லைக்குள் கண்டறியப்பட்டன. சீனாவின் இந்த நடவடிக்கைக்கு தைவான் ராணுவம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.