< Back
உலக செய்திகள்
சீனா: ஆற்றில் படகுகள் மோதல் - 11 பேர் உயிரிழப்பு
உலக செய்திகள்

சீனா: ஆற்றில் படகுகள் மோதல் - 11 பேர் உயிரிழப்பு

தினத்தந்தி
|
2 March 2025 3:45 AM IST

ஆற்றில் படகுகள் மோதிய விபத்தில் 11 பேர் உயிரிழந்தனர்.

worபீஜிங்,

சீனாவின் ஹூனான் மாகாணத்தில் யுவான்ஷுய் என்ற ஆறு பாய்கிறது. இதனை சுற்றியுள்ள பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு படகு போக்குவரத்தே பிரதானமாக உள்ளது. எனவே அந்த ஆற்றில் ஏராளமான படகுகள் செல்வது வழக்கம்.

அந்தவகையில் ஒரு படகு பொதுமக்களை ஏற்றிச் சென்றது. அப்போது அந்த ஆற்றில் எண்ணெய் கசிவை சுத்தம் செய்யும் ஒரு பெரிய படகும் சென்று கொண்டிருந்தது. இதனையடுத்து அந்த படகுகள் ஒன்றையொன்று மோதின. இதனால் படகில் இருந்த பலர் ஆற்றில் தவறி விழுந்தனர்.

தகவலறிந்த மீட்பு படையினர் அங்கு சென்றதும் தண்ணீரில் தத்தளித்துக் கொண்டிருந்தவர்களை மீட்கும் பணி துரிதப்படுத்தப்பட்டது. எனினும் இந்த விபத்தில் 11 பேர் ஆற்றில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தனர்.

Related Tags :
மேலும் செய்திகள்