< Back
உலக செய்திகள்
பாகிஸ்தானில் பழங்குடியினர் மோதல்.. பல நாட்களுக்கு பிறகு சண்டை நிறுத்தம்
உலக செய்திகள்

பாகிஸ்தானில் பழங்குடியினர் மோதல்.. பல நாட்களுக்கு பிறகு சண்டை நிறுத்தம்

தினத்தந்தி
|
2 Dec 2024 2:08 PM IST

பாகிஸ்தானின் குர்ரம் பகுதியில் பல நாள் மோதல் மற்றும் வன்முறைகளுக்குப் பிறகு சண்டை நிறுத்தம் ஏற்பட்டது.

பெஷாவர்:

பாகிஸ்தானின் கைபர் பக்துன்க்வா மாகாணத்தில் பழங்குடியின சமூகத்தை சேர்ந்த இரு பிரிவினர் இடையே நீண்ட காலமாக மோதல் போக்கு நீடித்து வருகிறது. கடந்த மாதம் 21-ந் தேதி குர்ரம் மாவட்டத்தில் ஒரு பிரிவினர் சென்ற வாகனங்கள் மீது நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் 57 பேர் கொல்லப்பட்டனர். இதை தொடர்ந்து மாவட்டம் முழுவதும் இரு பிரிவினருக்கும் இடையே பயங்கர மோதல் வெடித்தது. இதில் 130 பேர் உயிரிழந்துள்ளனர். பலர் படுகாயம் அடைந்தனர்.

மாகாண அதிகாரிகள் இரு தரப்பினரையும் அழைத்து பேச்சுவார்த்தை நடத்தினார்கள். 7 நாள் சண்டை நிறுத்தம், 10 நாள் சண்டை நிறுத்தம், சமாதான பேச்சுவார்த்தை என அவர்கள் எடுத்த முயற்சிகள் தோல்வியடைந்தன. இதனால் மீண்டும் மீண்டும் வன்முறை சம்பங்கள் அரங்கேறின. எனினும் தொடர்ந்து சமாதான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன.

அதிகாரிகளின் தொடர் முயற்சிகளுக்கு பிறகு இரண்டு பழங்குடியின சமூகத்தினரிடையே நேற்று சண்டை நிறுத்த ஒப்பந்தம் ஏற்பட்டுள்ளது. பல நாட்களாக நீடித்த சண்டை முடிவுக்கு வந்தது. குர்ரம் மாவட்டத்தில் மோதல் ஏற்பட்ட பகுதிகள் முழுவதும் அமைதி நிலைநாட்டப்பட்டுள்ளதாக காவல்துறை துணை ஆணையர் ஜாவேதுல்லா மெஹ்சூத் தெரிவித்தார்.

மோதல் நடைபெற்ற பகுதிகளில் சாலைகளை மீண்டும் திறப்பது மற்றும் சமாதான ஒப்பந்தத்தில் கையெழுத்திடுவது தொடர்பாக பழங்குடியின தலைவர்களின் கவுன்சிலான ஜிர்கா பேச்சுவார்த்தை நடத்தும். ஆயுதமேந்திய பழங்குடியினர் துப்பாக்கிச் சூடு நடத்திய பகுதிகளில் இருந்து அகற்றப்பட்டு, காவல்துறை மற்றும் பாதுகாப்பு படைகள் நிறுத்தப்பட்டுள்ளன என்றும் துணை ஆணையர் மெஹ்சூத் தெரிவித்தார்.

மேலும் செய்திகள்