எகிப்து: பல்கலைக்கழக மாணவர்களை ஏற்றி சென்ற பஸ் விபத்துக்குள்ளானதில் 12 மாணவர்கள் பலி
|பல்கலைக்கழக மாணவர்களை ஏற்றி சென்ற பஸ் விபத்துக்குள்ளானதில் 12 பேர் உயிரிழந்தனர். 33 பேர் காயமடைந்தனர்.
கெய்ரோ,
வடகிழக்கு எகிப்தின் சூயசை பகுதியில் கலாலா பல்கலைக்கழகம் செயல்பட்டு வருகிறது. பல்கலைக்கழகம் முடிந்து வீடு திரும்பி கொண்டிருந்த மாணவர்களை ஏற்றி சென்ற பஸ் ஐன் சோக்னா நெடுஞ்சாலை வழியாக சென்ற கொண்டிருந்தபோது திடீரென சாலையில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
இந்த கோர விபத்தில் 12 பேர் உயிரிழந்தனர் மற்றும் 33 பேர் காயமடைந்ததாக அந்நாட்டு சுகாதார அமைச்சகம் நேற்று இரவு தெரிவித்துள்ளது. ஆனால் விபத்துக்கான காரணம் என்ன என்பதை அமைச்சகம் வெளியிடவில்லை.
இந்த சம்பவம் பற்றி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் காயமடைந்தவர்களை மீட்டு 28 ஆம்புலன்ஸ்கள் மூலம் சூயஸ் பகுதியில் உள்ள மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களின் நிலை குறித்து எந்த தகவலும் வெளியாகவில்லை. இந்த சம்பவம் பற்றி வழக்குப்பதிவு செய்த போலீசார் விபத்துக்கான காரணம் குறித்து தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.