< Back
உலக செய்திகள்
2025-ம் ஆண்டு பிறக்கிறது; பாபா வாங்கா, நாஸ்டிரடாமஸ் கணிப்பு கூறுவது என்ன?
உலக செய்திகள்

2025-ம் ஆண்டு பிறக்கிறது; பாபா வாங்கா, நாஸ்டிரடாமஸ் கணிப்பு கூறுவது என்ன?

தினத்தந்தி
|
31 Dec 2024 10:15 PM IST

2025-ம் ஆண்டு நாளை பிறக்கும் சூழலில், பாபா வாங்கா மற்றும் நாஸ்டிரடாமஸ் வெளியிட்டுள்ள கணிப்புகள் பற்றி பார்க்கலாம்.

வாஷிங்டன்,

உலகம் முழுவதும் புது வருடத்தில் ஏற்படும் நிகழ்வுகளை பற்றி பல்கேரியாவை சேர்ந்த பாபா வாங்கா மற்றும் பிரான்சை சேர்ந்த நாஸ்டிரடாமஸ் வெளியிட்டுள்ள கணிப்புகள் பலரால் ஆர்வத்துடன் பார்க்கப்படுகிறது. 2025-ம் ஆண்டு பிறக்க இருக்கிறது. இதில் அவர்களின் கணிப்புகள் பற்றிய விவரங்கள் வெளிவந்துள்ளன.

இவற்றில் மனிதர்களுடன் வேற்று கிரகவாசிகளின் தொடர்பு, விளாடிமிர் புதின் மீது நடத்தப்படும் படுகொலை முயற்சி, ஐரோப்பிய நாடுகளில் பயங்கரவாத தாக்குதல்கள் மற்றும் மன்னர் சார்லஸ் அரசுக்கு எதிரான கொந்தளிப்பு உள்ளிட்டவை பற்றிய கணிப்புகள் பரவலாக ஆர்வம் மற்றும் விவாதம் ஆகியவற்றை கிளப்பின.

2025-ம் ஆண்டுக்கு அவர்கள் கணித்துள்ள விசயங்கள் மீண்டும் பலரையும் கவனிக்க செய்துள்ளது.

பாபா வாங்காவின் கணிப்புகள் கூறுவது என்ன?

ஐரோப்பிய பகுதிகளில் பேரழிவை ஏற்படுத்தும் போர் ஏற்படும். இதனால், ஐரோப்பிய கண்டத்தின் மக்கள் தொகை அதிக அளவில் குறையும். ரஷியா தப்பி பிழைப்பது மட்டுமில்லாமல், உலகின் மீது ஆதிக்கம் செலுத்தும்.

அமெரிக்காவின் மேற்கு கடலோர பகுதிகளில் நிலநடுக்கங்கள் மற்றும் எரிமலைகள் உள்பட தொடர்ச்சியாக பேரழிவை ஏற்படுத்த கூடிய இயற்கை பேரிடர்கள் ஏற்படும் என்றும் அவர் கணித்துள்ளார்.

நாஸ்டிரடாமஸ் கணிப்புகள் கூறுவது என்ன?

மிச்செல் டி நாஸ்டர் டேம் எனப்படும் நாஸ்டிரடாமஸ் என மக்களிடையே பிரபலம் வாய்ந்த பிரான்ஸ் நாட்டை சேர்ந்த ஜோதிடர் கூற்றின்படி, ஐரோப்பிய பகுதி கொடூர போர்களால் கடுமையாக பாதிக்கப்படும். அவற்றின் எல்லை பகுதிகளுக்குள்ளேயே போர்கள் மூளும். உள்ளூர் மற்றும் சர்வதேச அளவில் என இரு தரப்பிலும் இருந்து வளரும் எதிரிகளை எதிர்கொள்ள வேண்டியிருக்கும்.

அவருடைய கணிப்புகள் குறிப்பிடும்படியாக படுமோசம் என்ற அளவில் உள்ளன. பேரழிவை ஏற்படுத்தும் மோதல் மற்றும் பிளேக் நோய் இவற்றிற்கு பின்னர், இங்கிலாந்து வீழ்ச்சியை சந்திக்கும். பெரிய அளவில் கொள்ளை நோய் ஏற்படும் என்றும் அவர் எச்சரித்து உள்ளார். வேறெதனையும் விட ஒரு கொடிய எதிரியாக அது இருக்கும் என்றும் அவர் விவரித்து உள்ளார்.

போரால் வீரர்கள் சோர்ந்து போய் நீண்டகால போர் ஒன்று ஒத்தி வைக்கப்படும் என்றும் அவர் கணித்துள்ளார். இது ரஷியா மற்றும் உக்ரைன் போரா? அல்லது இஸ்ரேல் மற்றும் காசா இடையேயான போரா? என்பது பற்றிய விவரங்கள் வெளியிடப்படவில்லை.

மேலும் செய்திகள்