< Back
உலக செய்திகள்
அமெரிக்கா: வெள்ளை மாளிகையில் தீபாவளி கொண்டாட்டம் - அதிபர் பைடன் பங்கேற்பு
உலக செய்திகள்

அமெரிக்கா: வெள்ளை மாளிகையில் தீபாவளி கொண்டாட்டம் - அதிபர் பைடன் பங்கேற்பு

தினத்தந்தி
|
29 Oct 2024 3:43 PM IST

அமெரிக்காவின் வெள்ளை மாளிகையில் நடைபெற்ற தீபாவளி கொண்டாட்டத்தில் அதிபர் ஜோ பைடன் பங்கேற்றார்.

வாஷிங்டன்,

இந்து மத பண்டிகையான தீபாவளி உலகம் முழுவதும் நாளை மறுதினம் (31ம் தேதி) கொண்டாடப்பட உள்ளது. இந்தியாவில் தீபாவளியை கொண்டாட மக்கள் தயாராகி வருகின்றனர். அதேவேளை, உலகம் முழுவதும் உள்ள இந்தியர்களும் தீபாவளியை கொண்டாட தயாராகி வருகின்றனர்.

இந்நிலையில், அமெரிக்காவின் வெள்ளை மாளிகையில் இன்று தீபாவளி கொண்டாட்டம் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் பங்கேற்றார். இந்த கொண்டாட்ட நிகழ்ச்சியில் அமெரிக்காவாழ் இந்தியர்கள், எம்.பி.க்கள், அரசு அதிகாரிகள் உள்பட பல்வேறு தரப்பினர் பங்கேற்றனர். சர்வதேச விண்வெளி மையத்தில் இருந்து சுனிதா வில்லியம்சும் தீபாவளிக்கு வாழ்த்து தெரிவித்தார். அவர் வாழ்த்து தெரிவித்த வீடியோவும் வெள்ளை மாளிகையில் ஒளிபரப்பப்பட்டது.

மேலும் செய்திகள்