< Back
உலக செய்திகள்
உலக செய்திகள்
ஈரானில் காவல்துறை வாகனங்கள் மீது தாக்குதல் - 10 காவலர்கள் உயிரிழப்பு
|26 Oct 2024 7:06 PM IST
ஈரானில் காவல்துறை வாகனங்கள் மீது நடத்தப்பட்ட பயங்கரவாத தாக்குதலில் 10 பேர் உயிரிழந்தனர்.
டெஹ்ரான்,
ஈரான் தலைநகர் டெஹ்ரானில் இருந்து தென்கிழக்கில் சுமார் 1,200 கி.மீ. தொலைவில் அமைந்துள்ள கோஹர்குஹ் என்ற பகுதியில், காவல்துறை வாகனங்கள் மீது பயங்கரவாத தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இந்த தாக்குதலில் ஈரானின் தேசிய காவல் படையைச் சேர்ந்த 10 காவலர்கள் உயிரிழந்தனர்.
இந்த தாக்குதலுக்கு இதுவரை எந்த பயங்கரவாத அமைப்பும் பொறுப்பேற்கவில்லை. முன்னதாக இன்று அதிகாலை இஸ்ரேல் ராணுவம் ஈரானில் அதிரடி தாக்குதல் நடத்தியது. அதைத் தொடர்ந்து ஈரான் காவல்துறையினர் மீது பயங்கரவாத தாக்குதல் நடத்தப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.