< Back
உலக செய்திகள்
சூடானில் மருத்துவமனை மீது தாக்குதல்: 70 பேர் பலி
உலக செய்திகள்

சூடானில் மருத்துவமனை மீது தாக்குதல்: 70 பேர் பலி

தினத்தந்தி
|
26 Jan 2025 1:36 PM IST

மருத்துவமனை மீது டிரோன்களை வீசி தாக்குதல் நடத்தி உள்ளனர்.

போர்ட் சூடான்:

ஆப்பிரிக்காவின் சூடான் நாட்டில் ராணுவம் மற்றும் துணை ராணுவத்திற்கு இடையே நீண்ட காலமாக அதிகார போராட்டம் நடந்து வருகிறது. இவ்விரு தரப்பினருக்கும் இடையேயான மோதல்கள் காரணமாக ஏற்படும் மனித உயிரிழப்புகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்தநிலையில், சூடானின் டார்பூர் பகுதியில் உள்ள எல்-பஷாரில் செயல்பட்டு வந்த ஒரு மருத்துவமனை மீது டிரோன்கள் மூலம் தாக்கப்பட்டது. இந்த தாக்குதலில் 70 பேர் உயிரிழந்ததாக தகவல் வெளியாகி உள்ளது.

உலக சுகாதார நிறுவனம் வெளியிட்டுள்ள முதல்கட்ட தகவலின்படி, 70 பேர் கொல்லப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒரு மருத்துவமனை போன்ற பாதுகாக்கப்பட வேண்டிய இடத்தை தாக்குவது மனிதநேயத்திற்கு எதிரான செயலாகும் என்று கண்டித்துள்ளது. இந்த கொடூர செயலுக்கு உலக நாடுகள் பலவும் கண்டனம் தெரிவித்துள்ளன. மனிதாபிமான உதவிகளை வழங்கும் மருத்துவமனைகளைத் தாக்குவது போர் குற்றமாகும் என்று பல நாடுகள் தெரிவித்துள்ளன.

மேலும் செய்திகள்