< Back
உலக செய்திகள்

Photo Credit: AFP
உலக செய்திகள்
பொலிவியாவில் ராணுவ தளத்தை கைப்பற்றிய ஆயுத கும்பல்

3 Nov 2024 5:39 AM IST
லா பாஸ்,
தென் அமெரிக்க நாடான பொலிவியாவில் அதிபர் லூயிஸ் ஆர்ஸ் தலைமையிலான ஆட்சி நடைபெறுகிறது. இங்கு ஆயுத கும்பலுக்கும், ராணுவத்துக்கும் இடையே கடந்த சில மாதங்களாக மோதல்கள் நீடித்து வருகிறது. இந்தநிலையில் கோச்சம்பா நகர் அருகே உள்ள ராணுவ தளத்தை குறிவைத்து ஆயுத கும்பல் தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலின் போது, 20-க்கும் மேற்பட்ட ராணுவ வீரர்களை அவர்கள் கடத்திச்சென்றனர்.
அப்போது, ராணுவ தளத்தில் இருந்து வெடிமருந்து மற்றும் ஆயுதங்களும் கைப்பற்றப்பட்டன. இதனால் கோச்சம்பா ராணுவ தளத்தை தங்களது கட்டுப்பாட்டில் கொண்டு வந்துள்ளதாக ஆயுத கும்பல் அறிவித்தது. இதற்கிடையே இந்த ஆயுத கும்பல் முன்னாள் அதிபர் ஈவோ மோரேலஸ் உடன் இணைந்து செயல்படுவதாக அதிபர் லூயிஸ் ஆர்ஸ் குற்றம்சாட்டினார்.