< Back
உலக செய்திகள்
மேற்கு நாடுகள் மீது அதிரடி தாக்குதல் நடத்தப்படும்; புதின் எச்சரிக்கை
உலக செய்திகள்

மேற்கு நாடுகள் மீது அதிரடி தாக்குதல் நடத்தப்படும்; புதின் எச்சரிக்கை

தினத்தந்தி
|
6 Jun 2024 7:36 AM IST

ரஷியாவின் இறையாண்மைக்கு அச்சுறுத்தல் ஏற்படும் என தெரிய வந்தால், அணு ஆயுதங்களை பயன்படுத்துவோம் என புதின் எச்சரித்துள்ளார்.

செயின்ட் பீட்டர்ஸ்பர்க்,

உக்ரைன் மற்றும் ரஷியா இடையேயான போரானது 2 ஆண்டுகளுக்கும் மேலாக நடந்து வருகிறது. இதில், இரு தரப்பிலும் மக்கள் மற்றும் வீரர்கள் உயிரிழந்து வருகின்றனர்.

உக்ரைனுக்கு, அமெரிக்கா மற்றும் ஜெர்மனி, இங்கிலாந்து போன்ற சில ஐரோப்பிய நாடுகள் ஆதரவு தெரிவித்து வருகின்றன. இந்நிலையில், ரஷியா மீது உக்ரைன் சமீபத்தில் தாக்குதல் நடத்தியது. அதில், ஜெர்மனி நாட்டின் ஆயுதங்கள் பயன்படுத்தப்பட்டது.

ரஷியாவின் மீது தாக்குதல் நடத்த ஜெர்மனியின் ஆயுதங்களை உக்ரைன் பயன்படுத்தி இருப்பது, ஆபத்து ஏற்படுத்தும் நடவடிக்கை என்று ரஷிய அதிபர் புதின் குறிப்பிட்டார்.

மேற்கு நாடுகளை தாக்க நீண்ட தொலைவு சென்று தாக்க கூடிய ஆயுதங்களை, வேறு சில நாடுகளுக்கு ரஷியா வழங்க கூடும் என்று எச்சரிக்கை விடும் வகையிலும் அவர் பேசியுள்ளார்.

ரஷியாவுக்கு எதிராக தாக்குதலில் ஈடுபட்ட உக்ரைன், ஜெர்மனியின் ஆயுதங்களை பயன்படுத்தியுள்ளது என கூறப்படுகிறது. இந்த குற்றச்சாட்டை தெரிவித்த ரஷியா, ஜெர்மனிக்கு எச்சரிக்கை வெளியிட்டது.

எங்களுடைய நாட்டின் இறையாண்மைக்கு அச்சுறுத்தல் ஏற்படும் என தெரிய வந்தால், அணு ஆயுதங்களை பயன்படுத்த நாங்கள் தயாராக இருக்கிறோம் என புதின் மீண்டும் உறுதிப்பட கூறியுள்ளார்.

ரஷியாவின் சில பகுதிகள் மீது நீண்ட தொலைவு சென்று தாக்க கூடிய ஆயுதங்களை உக்ரைன் நாட்டுக்கு வழங்குவதற்கு அமெரிக்கா மற்றும் ஜெர்மனி ஆகிய நாடுகள் சமீபத்தில் அங்கீகரித்திருந்தன.

மேலும் செய்திகள்