< Back
உலக செய்திகள்
அமெரிக்கா முழுவதும் அமெரிக்கன் ஏர்லைன்ஸ் விமான சேவை மீண்டும் தொடக்கம்
உலக செய்திகள்

அமெரிக்கா முழுவதும் அமெரிக்கன் ஏர்லைன்ஸ் விமான சேவை மீண்டும் தொடக்கம்

தினத்தந்தி
|
24 Dec 2024 7:02 PM IST

அமெரிக்கா முழுவதும் அமெரிக்கன் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் விமான சேவை மீண்டும் தொடங்கியுள்ளது.

வாஷிங்டன்,

அமெரிக்காவின் முன்னணி விமான நிறுவனம் அமெரிக்கன் ஏர்லைன்ஸ். இந்த விமானத்தில் தினமும் ஆயிரக்கணக்கானோர் பயணம் மேற்கொண்டு வருகின்றனர். கிறிஸ்துமஸ் பண்டிகை நாளை கொண்டாடப்பட உள்ள நிலையில் மக்கள் தங்கள் சொந்த ஊர்களுக்கு செல்ல விமானத்தை அதிக அளவில் பயன்படுத்தி வருகின்றனர். அந்த வகையில் அமெரிக்காவில் விமான சேவையை மக்கள் அதிகம் பயன்படுத்தி வருகின்றனர்.

இதனிடையே, அமெரிக்கா முழுவதும் அமெரிக்கன் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் விமானங்கள் இன்று திடீரென தரையிறக்கப்பட்டன. விமான நிறுவனத்தின் கட்டுப்பாட்டு மையத்தில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு காரணமாக அமெரிக்கன் ஏர்லைன்ஸ் விமானங்கள் நாடு முழுவதும் தரையிறக்கப்பட்டன.

இதனால் கிறிஸ்துமஸ் பண்டிகையை கொண்டாட சொந்த ஊர்களுக்கு செல்ல திட்டமிட்டிருந்த மக்கள் கடும் அவதியடைந்தனர்.

இந்நிலையில், தொழில்நுட்ப கோளாறு சரிசெய்யப்பட்டதையடுத்து சில மணிநேர கால தாமதத்திற்கு பின்னர் அமெரிக்கன் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் விமானங்கள் மீண்டும் சேவையை தொடங்கியுள்ளன. அந்நாட்டு நேரப்படி காலை 6 மணி முதல் விமான சேவை பாதிக்கப்பட்ட நிலையில் 2 மணிநேர தாமதத்திற்கு பின் 8 மணி முதல் விமான சேவை மீண்டும் தொடங்கியுள்ளது.

மேலும் செய்திகள்