< Back
உலக செய்திகள்
கிளர்ச்சியாளர்களை குறிவைத்து வான்வழி தாக்குதல் - பொதுமக்கள் 10 பேர் பலி
உலக செய்திகள்

கிளர்ச்சியாளர்களை குறிவைத்து வான்வழி தாக்குதல் - பொதுமக்கள் 10 பேர் பலி

தினத்தந்தி
|
28 Dec 2024 9:01 AM IST

கிளர்ச்சியாளர்களை குறிவைத்து நடத்தப்பட்ட வான்வழி தாக்குதலில் பொதுமக்கள் 10 பேர் உயிரிழந்தனர்.

அபுஜா,

மேற்கு ஆப்பிரிக்காவில் அமைந்துள்ள நாடு நைஜீரியா. இந்நாட்டில் ஐ.எஸ்., அல்கொய்தா, போகோ ஹராம் போன்ற பயங்கரவாத அமைப்புகளும், பல்வேறு கிளர்ச்சியாளர்கள் குழுக்களும் செயல்பட்டு வருகின்றன.

இந்த பயங்கரவாத அமைப்புகளும், கிளர்ச்சி குழுக்களும் நைஜீரியாவில் பொதுமக்கள், பாதுகாப்பு படையினரை குறிவைத்து அவ்வப்போது தாக்குதல் நடத்தி வருகின்றன. இந்த தாக்குதல்களுக்கு பாதுகாப்புப்படையினர் தக்க பதிலடி கொடுத்து வருகின்றனர்.

இந்நிலையில், அந்நாட்டின் சொகுடோ மாகாணம் சிலிமி பகுதியில் கிளர்ச்சியாளர்கள் பதுங்கி இருப்பதாக நைஜீரிய பாதுகாப்பு படையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இந்த தகவலை தொடர்ந்து அப்பகுதியில் நைஜீரிய விமானப்படை வான்வழி தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலில் பொதுமக்கள் 10 பேர் உயிரிழந்தனர்.

கிளர்ச்சியாளர்கள் என நினைத்து நடத்தப்பட்ட தாக்குதலில் தவறுதலாக பொதுமக்கள் 10 பேர் உயிரிழந்ததாக நைஜீரிய ராணுவம் தெரிவித்துள்ளது.

மேலும் செய்திகள்