< Back
உலக செய்திகள்
டைம் டிராவல் செய்த விமான பயணிகள்.. நடந்தது என்ன..?
உலக செய்திகள்

டைம் டிராவல் செய்த விமான பயணிகள்.. நடந்தது என்ன..?

தினத்தந்தி
|
2 Jan 2025 10:59 PM IST

புது வருடம் பிறக்கும் நேரம் ஒவ்வொரு நாடுகளின் இருப்பிடத்தை பொறுத்து வேறுபடும்.

நியூயார்க்,

உலகம் முழுவதும் நேற்று நள்ளிரவு புத்தாண்டு கோலாகலமாக கொண்டாடப்பட்டது. புது வருடம் பிறக்கும் நேரம் ஒவ்வொரு நாடுகளின் இருப்பிடத்தை பொறுத்து வேறுபடும். அதன்படி, புத்தாண்டு முதலில் டோங்கா மற்றும் அதனை ஒட்டிய தீவு பகுதிகளில் பிறக்கும். அதன் பின்னர் நியூசிலாந்து, ஆஸ்திரேலிய ஆகிய நாடுகளில் புது வருடம் பிறக்கும். இங்கு புத்தாண்டு கொண்டாட்டங்கள் நடைபெறும்போது நமது நாட்டில் மாலை 4.30 மணி என இருக்கும். அதன் பின்னர் சீனா, இந்தியா, ஆப்பிரிக்க நாடுகள் மற்றும் அமெரிக்கா, அதனை ஒட்டியுள்ள நாடுகளில் புத்தாண்டு பிறக்கும்.

இந்நிலையில், 2025 ஜனவரி 1ம் தேதி நள்ளிரவு ஹாங்காங்கில் இருந்து புறப்பட்ட விமானம் ஒன்று 2024 டிசம்பர் 31ம் தேதி இரவு 8.30-க்கு லாஸ் ஏஞ்சல்ஸில் தரையிறங்கிய சம்பவம் வியப்பை ஏற்படுத்தியுள்ளது.

அதாவது, சீனா தலைநகர் ஹாங்காங்கில் முன்னதாகவே புத்தாண்டு பிறந்த நிலையில், லாஸ் ஏஞ்சல்ஸின் நேரம் 16 மணி நேரம் பின்தங்கியிருப்பதால் இந்த அரிய நிகழ்வு நிகழ்ந்துள்ளது. உலகளாவிய நேர மண்டலம் (Global Time Zone) தான் இதற்கு காரணம் என்று சொல்லப்படுகிறது.

இந்திய நேரப்படி (IST) இந்தியா இயங்குகிறது. இது ஒருங்கிணைந்த உலகளாவிய நேரத்தை விட 5 மணிநேரம் 30 நிமிடங்கள் (UTC +5:30) முன்னதாக இருப்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்