< Back
உலக செய்திகள்
45 வயது பெண்ணை விழுங்கிய மலைப்பாம்பு... அதிர்ச்சி சம்பவம்
உலக செய்திகள்

45 வயது பெண்ணை விழுங்கிய மலைப்பாம்பு... அதிர்ச்சி சம்பவம்

தினத்தந்தி
|
9 Jun 2024 4:19 PM IST

16 அடி நீளம் கொண்ட மலைப்பாம்பு ஒன்று பெரிய வயிற்றுடன் இருப்பதை கண்டு கிராமத்தினர் அதிர்ச்சியடைந்தனர்.

ஜகார்த்தா,

இந்தோனேஷியாவில் 45 வயது பெண் ஒருவரை 16 அடி நீளமுள்ள மலைப்பாம்பு விழுங்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மத்திய இந்தோனேஷியாவில் உள்ள கலேம்பங் கிராமத்தில் வசித்து வந்த 45 வயதான பரிதா எனும் பெண், கடந்த 3 நாட்களாக வீட்டிற்கு வரவில்லை. இதனால் அவரது கணவரும், கிராம மக்களும் சேர்ந்து காணாமல் போன பெண்ணை தேடி வந்துள்ளனர்.

அப்போது அங்குள்ள பகுதி ஒன்றில் காணாமல் போன பெண்ணின் உடைமைகளை கண்டறிந்த கிராமத்தினர், தேடுதலை தீவிரப்படுத்தியபோது அப்பகுதியில் 5 மீட்டர் (16 அடி) நீளம் கொண்ட மலைப்பாம்பு ஒன்று பெரிய வயிற்றுடன் இருப்பதை கண்டு அவர்கள் அதிர்ச்சியடைந்தனர்.

இதையடுத்து அந்த மலைப்பாம்பின் வயிற்றை கிழித்து பார்த்த போது அதனுள் பரிதா இறந்த நிலையில் கண்டறியப்பட்டார். உடனே, மலைப்பாம்பை முழுமையாகக் கிழித்து அதன் வயிற்றில் இருந்து பரிதாவின் உடலை அவர் அணிந்திருந்த உடையுடன் வெளியே எடுத்ததாக கிராமத்தினர் தெரிவித்துள்ளனர். இதுபோன்ற சம்பவங்கள் அரிதாக நடப்பதாகக் கூறினாலும், இந்தோனேஷியாவில் கடந்த சில ஆண்டுகளில் மலைப்பாம்பு முழுங்கி பலர் இறந்துள்ளதாகக் கூறப்படுகிறது.

மேலும் செய்திகள்