< Back
உலக செய்திகள்
உலக செய்திகள்
ஹஜ் யாத்திரை 98 இந்தியர்கள் பலி - மத்திய அரசு தகவல்
|22 Jun 2024 8:34 AM IST
மெக்காவில் வெப்ப அலைக்கு இந்திய ஹஜ் யாத்ரீகர்கள் 98 பேர் உயிரிழந்தனர்.
ரியாத்,
இந்த மாத தொடக்கத்தில் இருந்தே சவுதி அரேபியாவில் கடும் வெப்பம் நிலவி வருகிறது. குறிப்பாக மெக்காவில் கடுமையான வெப்ப அலை வீசி வருகிறது.
இதனால் ஹஜ் யாத்திரைக்கு சென்ற பலர் வெயில் தாக்கத்தை தாங்க முடியாமல் சுருண்டு விழுந்து உயிரிழந்தனர். வெளிநாடுகளை சேர்ந்த 550 பேர் வெயிலுக்கு பலியானதாக அதிர்ச்சி தகவல் வெளியானது. அவர்களில் பெரும்பாலானோர் எகிப்து மற்றும் ஜோர்டான் நாடுகளை சேர்ந்தவர்கள் என தெரியவந்தது.
இந்த நிலையில் இந்தியாவில் இருந்து ஹஜ் யாத்திரைக்கு சென்றவர்களில் 98 பேர் உயிரிழந்ததாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. டெல்லியில் பத்திரிகையாளர்களை சந்தித்த மத்திய வெளிறவு அமைச்சகத்தின் செய்தி தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால் இதனை தெரிவித்தார்.