< Back
உலக செய்திகள்

உலக செய்திகள்
நிலக்கரி சுரங்கத் தொழிலாளர்களை ஏற்றி சென்ற வாகனம் மீது குண்டு வெடித்ததில் 9 பேர் பலி

14 Feb 2025 2:35 PM IST
பாகிஸ்தானில் நிலக்கரி சுரங்கத் தொழிலாளர்களை ஏற்றி சென்ற வாகனம் மீது சாலையோரம் இருந்த குண்டு வெடித்ததில் 9 பேர் உயிரிழந்தனர்.
இஸ்லாமாபாத்,
பாகிஸ்தானின் பதற்றமான பலூசிஸ்தான் மாகாணத்தில் நிலக்கரி சுரங்கத் தொழிலாளர்களை ஏற்றி சென்ற வாகனம் மீது சாலையோரம் இருந்த வெடிகுண்டு வெடித்தது.
இதில் 9 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர் மற்றும் 7 பேர் காயமடைந்தனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் காயமடைந்தவர்களை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் இந்த சம்பவத்தில் ஈடுபட்டவர்களை தேடும் பணியில் அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர். இந்த தாக்குதலுக்கு இதுவரை எந்த குழுவும் பொறுப்பேற்கவில்லை. இந்த துயர சம்பவத்திற்கு வருத்தம் தெரிவித்துள்ள பலூசிஸ்தான் அரசாங்க செய்தி தொடர்பாளர் ஷாஹித் ராண்ட் இதுதொடர்பாக விசாரணை தொடங்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.